Editor Picked News

+2 தகுதிக்கு இந்திய கடற்படையில் பணிகள்

இந்திய கடற்படை பிளஸ் டூ முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் ‘பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம்- ஜூலை 2019’ (10+2 B.Tech Cadet Entry Scheme – July 2019) என்ற பயிற்சித் திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டு காலம் பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பி.டெக் படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும். பின்னர் அதிகாரியாக பணியமர்த்தப்படுவாராகள். இது நிரந்தர பணிவாய்ப்பாகும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தகுதி: +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இவர்கள் SSB நடத்தும் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: SSB நடத்தும் இரு நிலைகளில் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_27_1819b.pdf


0 comment